திட்டங்களை வகுக்கும்போது, அவை தோல்வியடையக்கூடிய விதங்களை மீண்டும் மீண்டும் கற்பனை செய்து, அவற்றைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து, திட்டம் தோல்வியடைவதைக் கண்டால் நீங்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு அதை வலுப்படுத்தும் பயிற்சியே மர்ஃபிஜிட்சு. மர்ஃபிஜிட்சுவின் அடிப்படை நடைமுறை இதோ:
- ஒரு திட்டத்தை வகுக்கவும்.
- காலக்கெடு கடந்துவிட்டதாகவும், திட்டம் தோல்வியடைந்துவிட்டது உங்களுக்குத் தெரியவருவதாகவும் கற்பனை செய்யுங்கள்.
- இந்தச் சூழலில் நீங்கள் அதிர்ச்சியடைந்தால், இத்துடன் பயிற்சி முடிந்தது.
- இல்லையெனில், எந்த விதத்தில் தோல்வி ஏற்பட அதிக வாய்ப்புள்ளதோ அதை மனதில் உருவகப்படுத்திப் பார்த்து, அதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து, இந்த நடைமுறையை மீண்டும் செய்யுங்கள்.
-alkjash, Hammertime நாள் 10: மர்ஃபிஜிட்சு